News March 16, 2025
ராகு தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரம்

கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் பகுதியில் நாகநாத சாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் இங்கு தான் உள்ளது. இங்கு நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக காட்சி அளிக்கின்றார். ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று பாலபிஷேகம் செய்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். SHARE பண்ணுங்க
Similar News
News March 17, 2025
பிளஸ் 2 போதும்: மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்

தமிழ்நாடு அரசு இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <
News March 17, 2025
மகளுக்கு நிச்சயதார்த்தம் நடத்த காசு இல்லாததால் தந்தை தற்கொலை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் சிவாலய பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (55). விவசாயியான இவருக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் நிச்சயதார்த்த விழா நடத்த காசு இல்லாததால் விஷம் குடித்துள்ளார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
News March 17, 2025
தஞ்சை: மனைவியை 30 இடங்களில் வெட்டிய கணவன்

கும்பகோணம், சன்னங்குளத்தைச் சேர்ந்த குமார் (40) அவரது மனைவி அனிதா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அனிதா தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். குமார் பலமுறை அழைத்தும், அனிதா வீட்டிற்கு வர மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த குமார் நேற்று அனிதாவை கை, கால், தலை என 30 இடங்களில் வெட்டியுள்ளார். காயமடைந்த அனிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, குமாரை கைது செய்தனர்.