News April 28, 2025
ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி

திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 28, 2025
தாம்பரம் – திருச்சி இடையே சிறப்பு ரயில்

கோடை விடுமுறையையொட்டி சென்னை தாம்பரம் – திருச்சி இடையே நாளை (ஏப்ரல் 29) முதல் ஜூன் 29ஆம் தேதி வரை இருமார்க்கத்திலும் வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருச்சியில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.40 மணிக்கு திருச்சி சென்றடையும்.
News April 28, 2025
உங்க தாசில்தார் நம்பர் உங்ககிட்ட இருக்கா?

தண்டையார்பேட்டை – 9384094001, திருவொற்றியூர் – 9384094008, புரசைவாக்கம் – 9445000484, பெரம்பூர் – 9445000485, மாதவரம் – 9384094007, அயனாவரம் – 9384094003, அமைந்தகரை – 9384094002, அம்பத்தூர் – 9445000489, எழும்பூர் – 9445000486, மதுரவாயல் – 9384094006, மாம்பலம் – 9445000488, வேளச்சேரி – 9384094005, கிண்டி – 9384094004, ஆலந்தூர் – 9384094010, சோழிங்கநல்லூர் – 9384094009. ஷேர் செய்யுங்கள்
News April 28, 2025
அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்குகிறது

அக்னி நட்சத்திர வெயில் வரும் மே 4ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை 25 நாட்கள் நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 1ஆம் தேதி முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்