News April 28, 2025
ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி

திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்
Similar News
News April 28, 2025
ராணிப்பேட்டையில் இரவு ரோந்து பனி விவரம் போலீசார் வெளியீடு

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் இன்று (april 28) வெளியிடப்பட்டுள்ளன. அவசர சூழ்நிலைகளில் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி உடனடி உதவி பெறலாம். பாதுகாப்பை வலுப்படுத்தும் இந்த நடவடிக்கையால், சட்டம் ஒழுங்கு மேலும் உறுதியடையும். அவசர நேரத்தில் காவல் எண்ணை அழைக்கவும் 9884098100.
News April 28, 2025
ராணிப்பேட்டையில் பிரசித்திபெற்ற சிவன் கோயில்

ராணிப்பேட்டை அருகே அசுரன் காஞ்சன் சிவன் பக்தனாயிருந்து தவம் செய்தும்,சிவன் தரிசனம் தரவில்லை. எனவே அசுரன் குருக்களை சித்திரவதை செய்தான். இதையறிந்த சிவன் ரிஷபத்தை வைத்து அசுரனை கொன்றார். அசுரன் சிவனிடம் மன்னிப்பு கேட்டதால் சிவன் மன்னித்தார், அதனால் இந்த மலைக்கு காஞ்சனகிரியென்று பெயர் வந்தது. இந்த கோயிலில் வழிபட்டால் பிரச்னைகள் நீங்குமென்பது நம்பிக்கை. இதை உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
News April 28, 2025
ராணிப்பேட்டையில் எந்த பதவியில் யார்?

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்- சந்திரகலா(9445754000), ராணிப்பேட்டை எஸ்.பி- விவேகானந்தா சுக்லா(9498100660), மாவட்ட வருவாய் அலுவலர்- சுரேஷ்(9489543000), ராணிப்பேட்டை கோட்ட வருவாய் அலுவலர்- ராஜராஜன்(9445000416), அரக்கோணம் கோட்ட வருவாய் அலுவலர்- வெங்கடேசன்(04177291075), ஆட்சியரின் நேர்முக உதவியாளர்- விஜயராகவன்(04172274000), SC/ST நலத்துறை அலுவலர்- சுகுமார்(9941332021). மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.