News March 23, 2025
ரயில் பயணிகள் கவனத்திற்கு

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள நேற்று விடுத்த செய்திக்குறிப்பில், திருவனந்தபுரத்தில் இருந்து மாா்ச்28, ஏப்.4- வெள்ளியன்று புறப்பட்டு சிறப்பு ரயில் ஞாயிறன்று ஷாலிமார் நிலையத்தை சென்றடையும். மறு மாா்க்கத்தில் மாா்.31, ஏப்.7 திங்களன்று ஷாலிமாரில் புறப்பட்டு புதனன்று திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயில் கோவை வழியாக இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 28, 2025
வேளாண்மை பல்கலையில் வேலை

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் (Walk-IN) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு நேர்காணல் ஏப்.3ஆம் தேதி நடைபெறவுள்ளது. சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.58,000 வழக்கப்படும். மேலும், விவரங்களுக்கு <
News March 28, 2025
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: ஒடிசா இளைஞர் கைது

கோவில்பாளையத்தில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவில்பாளையம் அண்ணா நகர் பகுதியில், பொன்னுத்தாய்(65) என்ற மூதாட்டிக்கு, அதே பகுதியில் கட்டட வேலை செய்து வந்த, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமீர் மாலிக்(23) என்பவர், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை கோவில்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
News March 28, 2025
கோவை மக்களுக்கு எச்சரிக்கை

கோவை மக்களுக்கு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ▶ காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். ▶ வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். ▶ தேநீர், காபி மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். கோவை மக்களே இதை உங்க உறவினர்களுக்கு Share பண்ணுங்க.