News April 14, 2025
ரயிலில் 120 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

மதுரையில் இருந்து குருவாயூர் செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனை தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் துரைசாமி தலைமையிலான ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கழிவறை அருகே 4 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் இருந்த 120 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து,ரயிலில் கொண்டு வந்தவர்கள் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 16, 2025
ராஜபாளையத்தில் பால் வியாபாரி கொலையா?

ராஜபாளையம் அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் பால் வியாபாரி சுப்பிரமணியன்(55). இவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி மற்றும் மகளை சுப்பிரமணியன் கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் சுப்பிரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இவரது உடலை மயானத்துக்கு கொண்டு சென்ற போது அதில் ரத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 16, 2025
விருதுநகரில் மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியுடைய சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
News April 15, 2025
தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வார விழா

அருப்புக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் தீ தொண்டு வார விழா அனுசரிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் தீ தொண்டு வார விழாவின் ஒரு பகுதியாக நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த வாரம் முழுவதும் தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தீயணைப்பு நிலைய அலுவலர் இன்று தெரிவித்தார்.