News March 20, 2025

ரமலானை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

ரமலான் திருநாளை முன்னிட்டு சென்னை சென்ட்ரலிருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம் வழியாக போத்தனூர் வரை செல்லும் சிறப்பு ரயில் (06027) மார்ச் 30 இரவு 11.30 க்கு சென்னையில் இருந்து புறப்படும். மறு மார்க்கத்தில் போத்தனூரிலிருந்து சென்னைக்கு (06028) மார்ச்.31 காலை 8.20 க்கு புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News April 30, 2025

அட்சய திருதியை: தங்கம் வாங்க போறிங்களா?

image

அட்சய திருதியையான இன்று (ஏப்ரல் 30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். உங்கள் வீட்டின் அருகில் உள்ள லட்சுமி, பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு வாங்குவது நல்லது. காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம். இல்லாவிட்டாலும் கல் உப்பாவது வாங்கிவிடுங்கள். ஷேர் பண்ணுங்க.

News April 30, 2025

இராணிப்பேட்டை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (ஏப்ரல்.29) இரவு பாதுகாப்பு பணிக்கான ரோந்து நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் பகுதிகளில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறை மற்றும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகும். அவசர தேவைக்காக இவை பயனுள்ளதாக இருக்கும்.

News April 30, 2025

டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்

image

மே1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீறி டாஸ்மாக் அரசு மதுபான கடைகள் திறந்தால் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதுக் கூடத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!