News March 17, 2025

ரத்தினக்கல் வழிப்பறி செய்த 7 பேர் கைது

image

மதுரை மாவட்டம் கச்சைகட்டி பெருமாள் நகரை முனியசாமி நகைகளில் ஜாதிக்கற்களை பதிக்கும் மற்றும் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். ஜன.24 அன்று கீழக்கரை வந்த இவரிடம் காரில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் முனியசாமியை மிரட்டி ரூ.60 லட்சம் மதிப்புள்ள ரத்தினக்கல்லை பறித்துச் சென்றனர். இதில் 7 பேரை போலீசார் கைது செய்து ரத்தினக்கல்லை பத்திரமாக மீட்டனர்.

Similar News

News March 17, 2025

நூற்றாண்டு கடந்த பாம்பன் கலங்கரை விளக்கம்

image

பாம்பனில் 1846ம் ஆண்டு ஐரோப்பியர்களால் 100 அடி உயர நேவல் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்திற்கு பிறகு கலங்கரை விளக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 33 ஆண்டுகளுக்கு பின் கடந்தாண்டு மீண்டும் பொதுபயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ரூ.10 கட்டணத்தில் பூங்காவுடன் இயங்கும் நேவல் கலங்கரை விளக்கம் குழந்தைகளுடன் பொழுதினை கழிக்க ஏற்ற இடமாக அமையும். *ஷேர் பண்ணுங்க

News March 17, 2025

ராமநாதபுரம் காவல்துறை ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று(மார்ச்.17) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தனது X வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

News March 17, 2025

உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

image

ராமநாதபுரத்தில் இன்று (மார்ச்.17) முதல் 22ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில், வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு Share பண்ணுங்க.

error: Content is protected !!