News March 30, 2025
யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். <
Similar News
News April 2, 2025
இராணிப்பேட்டை: காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை

இராணிப்பேட்டை மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலில் இன்று (ஏப்ரல் 02) அன்று காமாட்சி ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்குள்ள பக்தர்கள் அனைவரும் பூஜையில் கலந்துக்கொண்டு அம்மனின் தரிசனத்தை பெற்றுக்கொண்டனர். கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
News April 2, 2025
குழந்தையாக பிறக்கும் பாலமுருகன்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இரத்தினகிரி பாலமுருகன் கோயில் உள்ளது. இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், நோய் நொடி நீங்கி வளமான வாழ்வு பெற பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News April 2, 2025
குற்றச்செயலில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

இராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த தமிழ்ச்செல்வன் மற்றும் எழிலரசன் ஆகிய இரண்டு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஜெ.பு.சந்திரகலா இன்று தமிழ்ச்செல்வன் எழிலரசன் ஆகியோர்களை குண்டர் சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தார்.