News March 30, 2025
யூடியூப் சேனல் தொடங்க தமிழக அரசு பயிற்சி

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
Similar News
News April 4, 2025
ரூ.1 கோடி லஞ்சம் ; காவல் ஆய்வாளர் கைது

ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய புகாரில் தர்மபுரியை சேர்ந்த காவல் ஆய்வாளர் நெப்போலியன் கைது செய்யப்பட்டார். நீர்வளத்துறை கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன் என்பவர் வெட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனிப்படையினர் நெப்போலியனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
News April 4, 2025
JUST NOW: கைவிலங்குடன் தப்பியவர் சடலமாக மீட்பு

தருமபுரி மாவட்டம் ஏமனூரில் தந்தத்திற்காக ஆண் யானையை கொன்றதாக கைது செய்யப்பட்ட செந்தில் என்பவர் கடந்த மாதம் 18ஆம் தேதி கைவிலங்குடன் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் ஏமனூர் வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் அழுகிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் திட்டமிட்டே வனத்துறையினர் செந்திலை கொன்று விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
News April 4, 2025
1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <