News October 14, 2024

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 6,445 கன அடியிலிருந்து 17,596 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 89.920 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 52.559 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

Similar News

News November 20, 2024

71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

image

சேலம் நேரு கலையரங்கத்தில் இன்று (நவ.20) கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி, சேலம், கள்ளக்குறிச்சி எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில், தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

News November 20, 2024

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

இணைப்பு ரயில்களின் வருகை தாமதம் காரணமாக, கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (12244) இன்று (நவ.20) ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 04.05 மணிக்கும், கோவை- சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (12676) ஒரு மணிநேரம் தாமதமாக மாலை 04.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இரண்டு ரயில்களும் சேலம் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.

News November 20, 2024

ரூபாய் 1 லட்சம் கோடி கடனுதவி வழங்க இலக்கு

image

“தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் புதிதாக 1,000 மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளது. கூட்டுறவுத்துறை மூலம் கடந்த ஆண்டு ரூபாய் 86,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ரூபாய் 1 லட்சம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் வரவு, செலவுக் கணக்குகளைத் தொடங்க பொதுமக்கள் முன்வர வேண்டும்” என சேலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.