News February 13, 2025
மூட்டுவாதம் வராமல் தடுக்கும் கருடாசனம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739381911409_347-normal-WIFI.webp)
☆உடலையும், மனதையும் பலப்படுத்துகிறது. ☆மூட்டுவாதம், விரைவீக்கம் போன்றவை வராமல் தடுக்கிறது. ☆15-20 வினாடிகள் இந்த ஆசனத்தை செய்யலாம். ☆ஞாபக சக்தியை அதிகப்படுத்தும் ☆அதிகப்படியாக உள்ள தொடை சதையை குறைக்கும். ☆ஆசனம் செய்யும்போது இரண்டு கால்களையும் மாற்றி செய்யவும்.
Similar News
News February 13, 2025
குரங்கை வேட்டையாடிய சிறுத்தை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739425737585_60427969-normal-WIFI.webp)
குடியாத்தம் சாமியார் மலை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நேற்று குரங்குகள் கூச்சலிட்டவாரு இருந்துள்ளது. உடனே அங்கு சென்று பார்த்தபோது சிறுத்தை ஒன்று, குரங்கை வேட்டையாடி சென்றது தெரிந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனச்சரகத்தில் உள்ள காப்புக் காடுகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்து உள்ளது.
News February 13, 2025
8-ம் வகுப்பு மாணவி தற்கொலை: தவெக நிர்வாகி கைது
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739435245989_1241-normal-WIFI.webp)
விழுப்புரம் அருகே காதல் தொல்லையால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தவெக சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளரின் மைத்துனரும், நரசிங்கராயன்பேட்டை பொருளாளருமான சரவணன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
News February 13, 2025
இந்தியர்களுக்கு இஸ்ரேலில் மெகா வேலைவாய்ப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739422012790_1173-normal-WIFI.webp)
இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வரும் நிலையில், இன்னும் அதிக ஊழியர்கள் தேவைப்படுவதாக அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத் தெரிவித்துள்ளார். போரால் சிதிலமடைந்த நாட்டை மறு உருவாக்கம் செய்ய படித்த, படிக்காத என அனைத்துத் தரப்பு ஊழியர்களும் தேவைப்படுவதாகவும், ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக தங்களது அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.