News March 26, 2025
மும்மொழி கொள்கைக்கு 45000 பேர் கையெழுத்து

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் தேசிய புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் மட்டும் 45,000 க்கும் மேற்பட்டோர் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர் என்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் இன்று வெளியிட்ட பாஜக சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 15, 2025
குமரி கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை

கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று நள்ளிரவு 12 மணி முதல் (ஏப்.15) அமலுக்கு வந்துள்ளது. சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகம் கிழக்குக்கடல் பகுதியில் அமைந்திருப்பதால் இங்கிருந்து மீன்பிடிக்க செல்லும் 350 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. துறைமுகத்தில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
News April 15, 2025
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவராகிறார் சுரேஷ் ராஜன்

தமிழக முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளருமான என்.சுரேஷ் ராஜன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவராக நியமிக்கப்படுகிறார். இவர் நாளை பதவி பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் சென்னை புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் சென்னை புறப்பட்டுச் சென்றனர்.
News April 14, 2025
குமரியின் அருமையான சுற்றுலா தலம்

முருகப் பெருமானின் மனைவி வள்ளி தேவி நீராடியதன் காரணமாக இந்த இடத்திற்கு வள்ளி சுணை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இந்த இடம் தக்கலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் வேளி மலை குமாரகோயில் உள்ளது. கோயில் நடை காலை 6 முதல் 12 மணி வரை; மாலை 5 முதல் 7 மணி வரை திறந்திருக்கும். வள்ளிச்சுனைக்குச் செல்ல விரும்புவோர், தக்க பாதுகாப்புடனும் வழிகாட்டலுடனும் சென்று வரலாம். * நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க