News March 22, 2025
முன்னாள் படைவீரர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

“முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், கைம்பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் மனுவினை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2025
இரவு நேரங்களில் ஆபத்தா? உடனே அழையுங்கள்!

சேலம் மாவட்டம் காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இரவு நேரங்களில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றாலோ, விபத்து என்றாலோ உடனடியாக சம்பந்தப்பட்ட மொபைல் நம்பரை அழைத்தால், காவலர்கள் உடனே உதவிக்கு வருவார்கள் என அதிகாரிகள் அறிவுறுத்தி அந்த எண்களையும் அறிவித்துள்ளனர்.
News April 20, 2025
சேலம் வழியாக பாட்னாவுக்கு கோடைக்கால சிறப்பு ரயில்!

கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வரும் ஏப்.25, மே 02, 09, 16, 23, 30 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவிற்கும், மறுமார்க்கத்தில், ஏப்.28, மே 05, 12, 19, 26, ஜூன் 02 ஆகிய தேதிகளில் பாட்னாவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்; டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
News April 20, 2025
கஞ்சா ஹோம் டெலிவரி: தாய், மகன் கைது!

சேலம் மாவட்டம், ஓமலூரில் கஞ்சாவை வீட்டுக்கே சென்று விற்பனை செய்ததாக தாய், மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூங்கொடி, அவரது மகன் சந்தோஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, ஓமலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், மகன் கஞ்சா விற்ற சம்பவம் ஓமலூர் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.