News March 19, 2024
முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு 25ஆம் தேதி ஒத்திவைப்பு

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில், செம்மண் குவாரியில் விதிகளை மீறி அதிக அளவில் செம்மண் அள்ளியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதமசிகாமணி எம்பி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (மார்ச் 18) நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து வழக்கினை வரும் 25ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News April 20, 2025
விழுப்புரம் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் சீயப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் அருணா தம்பதியரின் மூத்த மகள் திலகவதி திருவண்ணாமலை கம்பன் கல்லூரியில் பி காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து, தகவல் கிடைத்த மேல்மலையனூர் போலீசார் சடலத்தைப் பெற்று செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 19, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (19.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News April 19, 2025
தீராத கடனும் காணாமல் போகும்

கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி, படையலிட்டு, வழிபட வேண்டும். இப்படி, ஒன்பது பெளர்ணமிகள் வழிபட்டு வந்தால், கடன்கள் அடைபடும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க