News November 9, 2024
முதல்வர் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
தமிழகத்தில் முதற்கட்டமாக, 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதில் தென்காசி மாவட்டத்தை பி – பார்ம், டி – பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன், மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையளத்தில் நவ.20 விண்ணப்பிக்க வேண்டும் என மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2024
தென்காசி ரேசன் கடை வேலைக்கு நேர்முகத் தேர்வு!
தென்காசி மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் நரசிம்மன் நேற்று(நவ.,18) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்ட ரேசன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு நேர்முக தேர்வானது நவ.,25ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை குற்றாலம் பராசக்தி கல்லூரியில் நடைபெற உள்ளது. www.drbtsi.in இணையதளம் வழியாக அனுமதிச்சிட்டை பதிவிறக்கம் செய்து கலந்து கொள்ளலாம் என்றார். SHARE IT.
News November 19, 2024
தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்
தென்காசி மாவட்டத்தில் காவல் மற்றும் நெடுஞ்சாலை துறை ரோந்து பணியில் இன்று (நவ.18) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரம் மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 – ஐ தொடர்பு கொள்ளவும்.
News November 18, 2024
தென்காசியில் கிராம சபை கூட்டம் – ஆட்சியர் தகவல்
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உள்ளாட்சிகள் தினமான நவம்பர் ஒன்றாம் தேதி கிராமசபை கூட்டம் நடத்துவது வழக்கம். இந்நிலையில், பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டம் வருகிற 23ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.