News March 22, 2024

முதலமைச்சர் ஸ்டாலின் தருமபுரி வருகை

image

ஏப்ரல் 19 நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மக்களவை வேட்பாளர் மணியை ஆதரித்து மார்ச் 29ம் தேதி அன்று பிரச்சாரம் செய்ய உள்ளார். மேலும் அவர் பிரச்சாரத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இருப்பதால் கட்சி நிர்வாகிகள், உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இன்று(மார்ச் 22) திமுக தலைமை அறிவித்துள்ளது.

Similar News

News April 10, 2025

தருமபுரி மாவட்டத்தில் 135 பணியிடங்கள் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் பிடிஓ அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஏப்.26 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். *செம வாய்ப்பு. தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*

News April 10, 2025

ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அக்னிவீர் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழிலும் தேர்வு எழுதலாம். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

News April 10, 2025

சுடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு

image

தர்மபுரி மாவட்டம் நீடூரை சேர்ந்தவர் லோகநாதன், 42 நேற்று உயிரிழந்தார். இவரது உடலை அப்பகுதியிலுள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய, குழி தோண்டப்பட்டது. இதற்கு சுடுகாட்டிற்கு அருகேயுள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த கடத்துார் போலீசார், வி.ஏ.ஓ., முருகன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், சுடுகாட்டில் குழி தோண்டப்பட்டு லோகநாதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

error: Content is protected !!