News March 17, 2025

மீன்பிடிக்க சென்ற முதியவர் ஏரியில் தவறி விழுந்து பலி

image

கடம்பத்தூர், பிஞ்சிவாக்கம் காலனியைச் சேர்ந்த கன்னியப்பன் (60), கடந்த 14ம் தேதி திருப்பதிக்கு செல்கிறேன் என கூறி சப்பார் ஏரியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அங்கு தவறி விழுந்ததில் நீச்சல் தெரியாமல் மூழ்கியுள்ளனர். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

Similar News

News April 20, 2025

சிறுவாபுரி பால சுப்ரமணியர் கோயில்

image

சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என விரும்புபவர்கள் செவ்வாய்கிழமையில் சிறுவாபுரி முருகன் கோயிலில் வேண்டிக் கொண்டால், அடுத்த ஆண்டு அதே நேரத்திற்குள் அவர்களுக்கு சொந்த வீடு கட்டி முடிக்கும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பலரின் சொந்த வீடு கனவை இந்த முருகன் நிறைவேற்றி வைத்துள்ளார். இன்றும் நிறைவேற்றி வைத்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று (19/04/2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் . மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*

News April 19, 2025

திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்களை தெரிந்துகொள்ளுங்கள். ஆர்.கே. பேட்டை-044-27845709, ஆவடி-044-26850313, திருவள்ளூர்-044-27660254, பூவிருந்தவல்லி- 044-26274314, ஊத்துக்கோட்டை-044-27630262, கும்மிடிப்பூண்டி-044-27921491, பொன்னேரி-044-27972252, திருத்தணி-044-27885222, பள்ளிப்பட்டு-044-27843231. *மிக முக்கிய நம்பர்களான இவற்றை உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!