News April 16, 2025
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

உத்தமபாளையம் அருகே ராமசாமிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பியை தெரியாமல் மிதித்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 19, 2025
வெயிலில் இருந்து கறவை மாடுகளை பாதுகாக்க ஆலோசனை

தேனி மாவட்டத்தில் கறவை மாடுகள் வளர்ப்பு அதிகம் காணப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், கறவை மாடுகள் மற்றும் காளைகளை வெயிலில் கட்டி வைக்கக்கூடாது. உலர்ந்த தீவனங்கள், குச்சி புண்ணாக்கு, தாது உப்புக்கள் ஆகியவை தேவையான அளவில் உணவாக தர வேண்டும். குளிர்ச்சியான இடத்தில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டும் என கால்நடை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
News April 19, 2025
ஆசிரியர் பணி வாங்கித்தருவதாக ரூ.88 லட்சம் மோசடி

தேனியை சேர்ந்த சிரஞ்சீவி என்பவர் தனது தங்கை பவித்ராவிற்கு அரசுப் பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணி பெற்று தருவதாக கூறியுள்ளார். அதற்கு திண்டுக்கல்லை சேர்ந்த சூரஜ் என்பவரிடம் ரூ.88 லட்சம் கொடுத்துள்ளார். அவர் போலி பணி ஆணை வழங்கி மோசடி செய்துள்ளார். சிரஞ்சீவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சூரஜை நேற்று (ஏப்.18) கைது செய்தனர்.
News April 19, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் (ஏப்ரல் 19) நீர்மட்டம்: வைகை அணை: 56.27 (71) அடி, வரத்து: 110 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 99.38 (126.28) அடி, வரத்து: 21.40 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 39.10 (52.55) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: இல்லை.