News April 6, 2025
மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார்(25) மணலூர்பேட்டையில் நேற்று எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர்மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிவக்குமார் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 9, 2025
மேகங்கள் தவழும் வெள்ளி மலை

ஊட்டிக்கு செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் அருகில் உள்ள கல்வராயன் மலை அருகே வெள்ளி மலைக்கு சென்று வரலாம். மேகங்கள் தவழும் வெள்ளிமலைக்கு அருகில் அருவிகளும்,ஏரிகளும் மற்றும் பல எண்ணற்ற சுற்றுலா தளங்களும் உள்ளன. இந்த சம்மர் லீவுக்கு வெளில போக நேரம் இல்லாதவங்க ஒரு தடவை வெள்ளி மலைக்கு போயிட்டு வாங்க.. இத இப்பவே உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணி ட்ரிப்கு பிளான் பண்ணுங்க
News April 9, 2025
கள்ளிக்குறிச்சியில் பழங்குடியினர் நலத்துறையில் வேலை

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தொல்குடி திட்டத்தின் கீழ் பல்வேறு பதவியில் மொத்தம் 29 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைக்கு வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை பள்ளி படிப்பு போதும் – ஏப்ரல் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் <
News April 9, 2025
உளுந்தூர்பேட்டை அருகே முதியவர் சடலம் கண்டெடுப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி, களவனூர் அருகே முதியவர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்தில் நேரடியாக வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் சென்று இறந்தவர் யார் என்றும், கொலையா, தற்கொலையா என்றும் பல்வேறு கோணங்களில் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.