News April 23, 2025
மின்சாரம் தாக்கி காய்கறி வியாபாரி பலி

செங்கிப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் சேக் மவுலானா (53). இவர் தனது சகோதரி வீட்டில் தங்கி காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் குடிநீர் தொட்டியின் அருகில் குளிக்க சென்றுள்ளார். அப்போது குடிநீர் தொட்டியின் மின் மோட்டாரில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் அதன் அருகில் சென்ற சேக் மவுலானா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News August 5, 2025
தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (27). டிரைவரான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை செல்வநாதன் (38) என்ற நபர் கண்டித்த போது, இருவருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சந்தோஷ் மற்றும் அவரது நண்பன் அமரேஷ் இணைந்து செல்வநாதனை வெட்டிப் படுகொலை செய்தனர். இவ்வழக்கை விசாரித்த தஞ்சை நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News August 5, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 04) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 4, 2025
தஞ்சை: மாதம் சம்பளம் 1 லட்சம் Miss பண்ணாதீங்க!

தஞ்சையில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கீங்களா? நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.20,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளமாக கிடைக்கும். B.E/ B.Tech, MBA, Degree முடித்து விருப்பம் உள்ளவர்கள் இங்கே <