News May 15, 2024
மாவட்ட எஸ்பிஆய்வு
வருகின்ற 22.05.2024, 23.05.2024, 24.05.2024 அன்று திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா நடைபெற இருப்பதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்று இரவு தெப்பம் கட்டப்பட்டு வரும் கமலாலய குளத்திற்கு சென்று பொதுமக்கள் பாதுகாப்பு குறித்தும், போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Similar News
News November 20, 2024
கிராமசபை கூட்டம் நடத்த ஆட்சியர் உத்தரவு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் வரும் 23 ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது என ஆட்சியர் சாரு ஸ்ரீ தெரிவித்துள்ளார். கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், தூய்மை இந்தியா ஜல்ஜீவன் திட்டம் போன்ற பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
திருவாரூர் மாவட்டத்துக்கு மிக கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் உட்பட நாகை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 20, 2024
பருவமழை அவசர உதவிக்கு எண்கள் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்துள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் தேவைப்படும் அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உதவி தேவைப்படும் நபர்கள் 1077, 04366-226623 மற்றும் 9488547941 (வாட்ஸ்அப்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!