News October 18, 2024
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முகாம் நடத்த ஏற்பாடு
தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1,432 மாற்றுத்திறனாளி மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து 8 வட்டாரங்களில் ஒரு பள்ளியை தேர்வு செய்து மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. முகாமில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச ரயில், பஸ் பாஸ் வழங்குதல், உதவி உபகரணங்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 20, 2024
தேனியில் நவ.23ம் தேதி கிராமசபை கூட்டங்கள் – ஆட்சியர்
தேனி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் வருகிற 23ஆம் தேதி நடக்கிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார். அன்று நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டமானது, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. மேற்படி ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டமானது அன்று முற்பகல் 11.00 மணியளவில் ஊராட்சி மன்றத்தலைவர்களால் நடத்தப்படுகிறது என்றார்.
News November 20, 2024
தேனியில் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் முகாம்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்த்தி மாதாந்திர உதவித்தொகை வழங்கும் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சுயமாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்றார்.
News November 20, 2024
சபரிமலையில் 5 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு 5 நாட்களில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். பெரிய பாதை வழியாக நடைபயணமாக 28 ஆயிரத்து 300 பேர் சபரிமலையில் தரிசனம் செய்து உள்ளனர். புல்மேடு வழியாக 106 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வெளி மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்கள் வருகை தர தொடங்கினர்.