News April 23, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நாகர்கோவில் பயோனியார் குமாரசாமி கல்லூரியில் நடைபெறுகிறது. 200க்கும் மேற்பட்டவர்கள் இதில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பினை அளிக்க இருக்கிறார்கள். *உங்களது மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்*
Similar News
News April 24, 2025
ப்ளாக் பெல்ட் வாங்கிய மாணவனை பாராட்டிய எம்எல்ஏ

பைங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட, மூள்ளுர்துறை கிராமத்தை சேர்ந்த செல்வன். செ. தர்ஷன் இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கருப்பு பெல்ட் (Black belt), ஒரு நிமிடத்தில் 10 விரல்கள் மூலம் 57 புஸ்அப்ஸ் (Push Ups) செய்து உலக சாதனையும் படைத்துள்ளார். அவரை ராஜேஷ்குமார் எம்எல்ஏ பாராட்டினார்.
News April 23, 2025
ஒரே நாளில் 116 பேர் அதிரடி இடமாற்றம் எஸ் பி நடவடிக்கை

தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் ஆகிய பகுதிகளை தலைமையிடமாககொண்டு நெடுஞ்சாலை ரோந்து படை செயல்படுகிறது. காவல் நிலையம் நெடுஞ்சாலை ரோந்து ஆயுதப்படை என 69 போலீசார் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் போலீசார் 47 பேர் என நேற்று ஒரே நாளில் 116 போலீசாரை இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டார்.
News April 23, 2025
குமரியில் 93 மெட்ரிக் டன் நெல் விதைகள் விநியோகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பு சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் நெல் விதைப்பு பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் விவசாயிகளுக்கு முதல் பருவ கன்னிப்பூ சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் 93 மெட்ரிக் டன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் ஜென்கின் பிரபாகர் நேற்று கூறினார்.