News March 23, 2025
மார்ச் 28 எரிவாயு நுகர்வோர்கள் கூட்டம்

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இதில் நுகர்வோர்கள் பங்கேற்று எரிவாயு உருளை பதிவு செய்தல் மற்றும் விநியோகத்தல், குறைபாடுகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2025
சேலம் வழியாக ப்ரௌனிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

வரும் ஏப்.26, மே 03, 10, 17, 24 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து ப்ரௌனிக்கும், மறுமார்க்கத்தில், ஏப்.29, மே 06, 13, 20, 27 ஆகிய தேதிகளில் ப்ரௌனியில் இருந்து போத்தனூருக்கும் வாராந்திர கோடைக்கால சிறப்பு ரயில்கள் (06055/06056) இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேலம், திருப்பூர், ஈரோடு வழியாக இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
News April 20, 2025
சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேலம் மாவட்டத்தில் 382 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
News April 20, 2025
சேலம்-மயிலாடுதுறை ரெயில் சேவையில் மாற்றம்

கரூர்- திருச்சி பிரிவில் உள்ள கரூர்-வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் பாலங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய சேலம்-மயிலாடுதுறை ரெயில் (வண்டி எண்-16812) நாளை மறுநாள் கரூரில் இருந்து மாலை 3.40 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.