News February 5, 2025
மானாமதுரை: அரசுப் பள்ளியில் சாதி பார்க்கும் ஆசிரியை?

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பிடாவூர் அரசுப் பள்ளியில் 6 மாதமாக பெண் ஆசிரியை ஒருவர் சாதி ரீதியாகவும், மற்ற பிற காரணங்களை கூறியும் மோதலில் ஈடுபடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் 2 ஆசிரியர்கள் பணி மாறுதல் பெற்றுச் சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மேலாண் குழு தலைவர் கீதா, முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் வட்டார கல்வி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
Similar News
News April 21, 2025
சிவகங்கை: வேலைவாய்ப்பு முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுலகத்தில் வருகின்ற 25ஆம் தேதி காலை 10:30 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலை வழங்கும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே வேலை நாடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்கள் – 2

▶️தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்
▶️மடப்புரம் காளி கோயில்
▶️பிள்ளையார்பட்டி குபேரன் கோயில்
▶️திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில்
▶️சொக்கநாதபுரம் ப்ரித்யங்கரா தேவி ஆலயம்
▶️மருது பாண்டியர்கள் நினைவு இடம்
▶️கொள்ளங்குடி வெட்டுடைய காளியம்மன் கோயில்
▶️பிரான்மலை
*நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<16146331>> பாகம் – 1 <<>>
(உங்களுக்கு தெரிந்த சுற்றுலா தளங்களை நீங்கள் கூறலாம்)
News April 21, 2025
சிவகங்கை மாவட்ட பெண்கள் கவனத்திற்கு

சிவகங்கை: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க