News March 20, 2025
மாணவியிடம் சில்மிஷம், ஆசிரியர் போக்சோவில் கைது

கிருஷ்ணகிரி அருகே, தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவியிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து புகாரின்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன் விசாரணை நடத்தினர். அதில், தேர்வு எழுதிய மாணவியிடம் ஆசிரியர் ரமேஷ், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அதே அறையில் மற்றொரு மாணவியிடமும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிந்தது.
Similar News
News March 21, 2025
கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் நிலத்தகறாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜேஷ் என்பவரை கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ், மனோஜ் குமார், விஜயகுமார் ஆகிய மூன்று பேருக்கு ஓசூர் மாவட்ட அமர்வு கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
News March 20, 2025
ரசாயன ஊசி செலுத்தப்பட்ட 6 டன் தர்பூசணி பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் ரசாயன ஊசி செலுத்தப்பட்ட தர்பூசணி பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 9 இடங்களில் சோதனை மேற்கொண்ட உணவுத்துறை அதிகாரிகள் 6 இடங்களில் சுமார் 6 டன் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், உள்புறம் சிவப்பாக இருப்பதற்காக ஊசி செலுத்தப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. இதை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News March 20, 2025
இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் ஒரு பிரிவான இந்திய அஞ்சல் கட்டண வங்கியில், காலியாக உள்ள 51 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் நாளைக்குள் (மார்ச்.21) <