News April 26, 2025

மாணவி திடீர் மரணம் – வீடுகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

image

வன்னியூர் பரகுன்று பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி பென்சி லின்டா(25) நேற்று 25ஆம் தேதி மர்ம காய்ச்சல் காரணமாக திடீரென மரணம் அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில் பரகுன்று கிராமத்தில் இன்று 26ஆம் தேதி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் வீடு வீடாக சென்று, அங்குள்ள மக்களுக்கு காய்ச்சல், சளி உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.

Similar News

News April 27, 2025

மின் கம்பத்தில் அமர்ந்து வட மாநில வாலிபர் தர்ணா

image

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பாதோவ் மாஞ்ஜி இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனம் அவருக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது இதனால் விரக்தி அடைந்த அவர் அஞ்சு கிராமம் அருகே மேட்டுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏறி அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டம் நடத்தினார் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அவரை சமாதானம் செய்து கீழே இறக்கினார்

News April 26, 2025

குமரி விவசாயிகளுக்கு 1.25 லட்சம் மல்பரி நாற்றுகள் விநியோகம்

image

குமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 1.25 லட்சம் மல்பரி நாற்று உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மாநிலத் திட்டத்தின் கீழ் பட்டு கூட்டில் இருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களுக்கு ரூ.1.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அலங்கார பூக்கள், மாலை உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று ஆட்சியர் அழகு மீனா கூறினார்.

News April 26, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி ஊழியர்கள் கீரிப்பாறையில் காலை 9 மணிக்கு ரப்பர் தொழிற்சாலை முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளனர். புன்னைநகர் லூர்து அன்னை ஆலயத்தில் ஜெபமாலை புகழ்மாலை 6.30 மணிக்கு திருப்பலி 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. 

error: Content is protected !!