News January 23, 2025
மவுனம் காக்கும் திமுக..

காங்கிரஸை தொடர்ந்து, சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகளும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. கடந்தாண்டு கடைசி வரை மவுனம் காத்த DMK, இறுதியில் ஆளுநரின் கருத்தியல் சார்ந்த விஷயங்களில் கருத்துவேறுபாடு இருந்தாலும், அவரது பதவிக்கு மதிப்பளித்து விருந்தில் பங்கேற்பதாக கூறியது. இம்முறையும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தாலும், DMK விருந்தில் பங்கேற்கும் என்றே கூறப்படுகிறது.
Similar News
News August 9, 2025
4 ஆண்டுகளில் 17.74 லட்சம் பேருக்கு இலவச பட்டா: CM

சென்னை, தாம்பரத்தில் 20,021 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை CM ஸ்டாலின் வழங்கினார். பின்னர் விழா மேடையில் பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 17,74,561 குடும்பத்தின் வீட்டுமனை பட்டா கனவு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை நோக்கி TN வளர்ந்து வருவதாகவும் கூறினார். மேலும், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் ‘திராவிட மாடல் 2.0’ அரசு தொடரும் என்றும் சூளுரைத்தார்.
News August 9, 2025
ராமதாஸுக்காக காத்திருக்கும் நாற்காலி

மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு தொடங்கியுள்ளது. பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தும் ராமதாஸ் வரவில்லை. ஆனால், பொதுக்குழு மேடையில் ராமதாஸுக்காக தனியாக ஒரு நாற்காலி போடப்பட்டுள்ளது. பாமக வரலாற்றில் ராமதாஸ் இன்றி நடக்கும் முதல் பொதுக்குழு இதுவாகும். இதில், அன்புமணியே தலைவர், கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
News August 9, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪தாம்பரத்தில் <<17350203>>புதிய <<>>GH-யை திறந்து வைத்த CM ஸ்டாலின்
✪எம்ஜிஆரை <<17349030>>விமர்சித்த <<>>திருமாவளவன்
✪தங்கம் <<17348877>>விலை <<>>சரிவு.. சவரனுக்கு ₹200 குறைவு
✪எல்லையில் <<17348912>>மீண்டும் <<>>மோதல்.. 2 வீரர்கள் மரணம்
✪புதிய <<17347827>>வரிவிதிப்புகளால் <<>>கோடி கோடியாக பணம்: டிரம்ப் ✪CSK-ல் <<17341504>>இருந்து <<>>விலகும் அஸ்வின்.. ரசிகர்கள் அதிர்ச்சி