News April 7, 2025

மழையால் சேதமான மின் வயரை மிதித்த 6 வயது சிறுவன் பலி

image

சீதபற்பநல்லூர் சேர்ந்த முத்து என்பவரது மகன் மாதேஷ் வயது 6. இவர் அங்கன்வாடியில் படித்து வருகிறார். நேற்று சூறைக்காற்றுடன் பெய்த மழையில் மின்கம்பங்கள் விழுந்தன. இன்று காலை அதே பகுதியில் நடந்து சென்ற மாதேஷ் மின் வயரில் மிதித்து விட மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தான். சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 19, 2025

“பொதுமக்கள் சட்ட உதவிக்கு அணுகலாம்”

image

பாளையங்கோட்டை சட்டக் கல்லூரி அரங்கில் நேற்று ஏப்ரல் 18 நடைபெற்ற மாபெரும் மரக்கன்று நடும் விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசரும் மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழு உறுப்பினருமான தண்டபாணி மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினர். அப்போது அவர், “பொதுமக்கள் எந்த நேரமும் சட்டப்பணிகள் ஆணையக் குழுவை அணுகலாம். உங்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டுள்ளோம். சட்ட ரீதியான உதவிகள் செய்ய ஆணைக் குழு தயாரக உள்ளது” என்றார்.

News April 18, 2025

ரூ.50,000 சம்பளத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை

image

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டுமானப்பணிக்கு (FABRICATION FITTER) 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 25,000 – 50,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பிற்கு கீழ் படித்திருந்தால் போதுமானது. 3-4 வருட அனுபவம் தேவை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக்<<>> செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

News April 18, 2025

நெல்லை: ரயில் பயணிகளுக்கு பிரத்யேக செயலி (APP)

image

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும், ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. *RailMadad* என்ற அப்ளிகேஷனை இந்த <>லிங்க்<<>> மூலம் பதிவிறக்கம் செய்து பயணிகள் பயன்பெறலாம். தமிழ் உட்பட 12 மொழிகளில் இந்த செயலி செயல்படுகிறது. புகார்களுக்கு உடனடி தீர்வும் கிடைக்கும் *SHARE *

error: Content is protected !!