News March 30, 2025

மருத்துவ விழிப்புணர்வு முகாம்-கலெக்டர் தகவல்

image

தேனி மாவட்டத்தில் புற்றுநோய்,பக்கவாதநோய்,தொழுநோய்,காசநோய்,கண்பார்வை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு பெரியகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அடுத்த மாதம் ஏப்.9 மற்றும் 16ந் தேதிகளில் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சீத்சிங் தெரிவித்தார்.

Similar News

News April 3, 2025

இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

தேனி மாவட்டத்தில் 02.04.2025 10 மணி முதல் 6 மணி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News April 2, 2025

சிறப்பு வாய்ந்த குச்சனூர் சனீஸ்வரன் கோயில்

image

நவக்கிரகங்களில் ஒன்றான சனீஸ்வர பகவானுக்கு அமைந்துள்ள கோயில்தான் குச்சனூர் கிராமத்தில் உள்ள இந்த சனீஸ்வரன் ஆலயம். ஏழரை சனியால் ஏழேழு ஜென்மத்திலும் கஷ்டம் என்பார்கள். சனி தோஷம் உள்ளவர்கள், இந்த கோயிலில் பிரத்தியேகமாக வழிபாடு செய்வது வழக்கம். சனிக்கிழமை தோறும் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், தொழில் வளர்ச்சி பெகும், தோஷங்கள் நீங்கும். சனிப்பெயர்ச்சி உள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News April 2, 2025

தேனியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று(ஏப்.2) முதல் ஏப்.4 வரை தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!