News March 31, 2025
மருதமலை சிறப்பு தெரியுமா?

கோவையின் அடையாளமாக திகழும் மருதமலை முருகன் கோயில், முதலில் கொங்கு சோளர்களால் நிர்மாணிக்கப்பட்டது. விஜய நகர, கொங்கு சிற்றரசர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இத்திருத்தலம் உருவானது. மருதாசலம், மருதவரையான், மருதைய்யன் என்ற பெயர்களில், 9ஆம் நூற்றாண்டிலேயே மக்களிடம் இக்கோயில் அறியப்பட்டிருந்தது. பாம்பாட்டி சித்தர், இங்கு சில காலம் வசித்தாராம். தீமைகளை போக்கும் சர்வ வள்ளமை, மருதமலை முருகனுக்கு உள்ளதாம்.
Similar News
News April 3, 2025
கோவை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில் இன்று(ஏப்.3) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 2, 2025
வணிக நிறுவனங்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

கோவை கலெக்டர் பவன்குமார் நேற்று விடுத்த செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். அதேபோல உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும் விதிமுறைகளுக்குட்பட்டு தமிழில் பெயர் வைத்திருக்க வேண்டும். மே.15ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு அபராதம் விதிக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
News April 2, 2025
கோவை: பொன்னூத்தம்மன் கோயில்!

கோவை, பன்னிமடை அருகே உள்ள வாரப்பாளையத்தில் புகழ்பெற்ற பொன்னூத்தம்மன் கோயில் உள்ளது. சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் பொன்னூத்தம்மனை வழிபட்டால், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், பிரச்சனைகள் நீங்குமாம். இங்குள்ள பூவரச மரத்தில் குழந்தை தொட்டில் கட்டுவோருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகிறதாம். உங்கள் குடும்பத்தில் திருமணத்திற்கு காத்திருப்பவர்கள், குழந்தைபெற நினைப்பவர்களுக்கு இதை Share பண்ணுங்க.