News March 28, 2025
மயிலை மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 98 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News August 9, 2025
பொறையாரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார். அப்பொழுது அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில், பொதுமக்களுக்கு அழிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கோப்புகளையும் ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
News August 8, 2025
திருச்சி-தாம்பரம் ரயிலை 7 நாட்களும் இயக்க கோரிக்கை

மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையிலான மீட்டர் கேஜ் பாதையை அகலப் பாதையாக மாற்ற வேண்டும்; திருச்சியில் இருந்து தாம்பரம்வரை 5 நாட்கள் இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயிலை 7 நாட்களும் இயக்க வேண்டும்; அந்தியோதயா ரயில் சீர்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை எம்.பி சுதா மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
News August 8, 2025
மயிலாடுதுறை: ஆடி வெள்ளி இதை தெரிஞ்சிக்கோங்க!

ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
இறை வழிபாடு
நேர்த்திக்கடன்கள்
தாலி சரடு மாற்றுதல்
ஆடிப்பெருக்கு வழிபாடு
கூழ் படைத்தல்
விவசாயம்
செய்யக்கூடாதவை!
திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
வளைகாப்பு
பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!