News April 13, 2024

மயிலாடுதுறையில் மாபெரும் தூய்மை பணி

image

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட சித்தர்காடு பகுதியில் உள்ள பனந்தோப்பு தெரு, பாரதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாபெரும் தூய்மை பணி இன்று நடைபெற்றது. தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர் மா.ரஜினி அறிவுறுத்தலில் நடைபெற்ற தூய்மை பணியில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சாலையோரம் மண்டிக்கிடந்த புதர்களை அகற்றி குப்பைகளை சுத்தம் செய்தனர்.

Similar News

News April 28, 2025

மயிலாடுதுறை: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

image

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..

News April 28, 2025

மயிலாடுதுறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

மயிலாடுதுறையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள CUSTOMER SUPPORT EXECUTIVE பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்…

News April 28, 2025

சத்துணவு மையத்தில் வேலை: கடைசி வாய்ப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் செய்து<<>> தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க நாளை (ஏப்.29) கடைசி தேதியாகும். மற்றவர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!