News April 10, 2024

மயிலாடுதுறையில் தீவிர பிரச்சாரம்

image

மயிலாடுதுறை வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காளி ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ம.க.ஸ்டாலின் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து திறந்த வாகனத்தில் சென்ற வேட்பாளருக்கு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மாம்பழம் சின்னத்தில் தங்களது வாக்கினை செலுத்துமாறு பிரச்சாரம் மேற்கொண்டார்.

Similar News

News April 12, 2025

மீன்பிடித் தடைக்காலம் ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மயிலாடுதுறையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மின்பிடித் தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீன்பிடி தடைக்காலத்திற்கு முன் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஏப்.14 இரவு 12 மணிக்குள் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க) 

News April 11, 2025

மயிலாடுதுறையில் பார்க்க வேண்டிய கோயில்கள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய 10 முக்கிய கோவில்கள்
1. வைத்தீஸ்வரன் கோயில்
2. சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
3. திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்
4. திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோயில்
5. சுவேதாரண்யேசுவரர் கோயில்
6. மயூரநாதசுவாமி கோயில்
7. பரிமளா ரங்கநாதர் கோவில்
8. வள்ளலார் கோயில் (திரு இந்தலூர் சிவன் கோயில்)
9. புனுகீஸ்வரர் கோயில்
10. திருமணஞ்சேரி கோயில், ஷேர் பண்ணுங்க

News April 11, 2025

விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரை கடன் – ஆட்சியர்

image

விவசாயிகளுக்கு ரூ. 2 கோடி வரை குறைந்த வட்டியில் வழங்கப்படும் நிதியுதவி உதவியினை பெறலாம். மேலும் விபரங்களுக்கு https://agriinfra.dac.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம். அதோடு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 5-வது தளத்தில் உள்ள துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை) நேரில் சந்தித்தும் தெளிவான தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!