News April 8, 2024
மயிலாடுதுறையில் ஐஜி தலைமையில் ஆலோசனை

மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் ஜியாவுல் ஹக் மற்றும் மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News April 10, 2025
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறையில் சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றிய 15 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்படும். ரூ.1 லட்சமும், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கமும் வழங்கப்படும். இதற்கு, அதிகாரப்பூர்வ இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 10, 2025
ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு APPLY NOW!

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு <
News April 9, 2025
மயிலாடுதுறை: டாஸ்மாக் இயங்காது

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை ஏப்.10 ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில், தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் உலர்தினமாக நாளை விடுமுறை என தெருவித்துள்ளார்.