News April 4, 2025
மயிலாடுதுறைக்கு புதியஇரயில் – பயணிகள் மகிழ்ச்சி

இராமேஸ்வரம் – தாம்பரம் இடையே புதிய ரயில் சேவையை ஏப்ரல் 6
பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்த இரயில் சேவை ராமேஸ்வரத்தில் இருந்து வரும் 6-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்.16104), ராமநாதபுரம், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னை செல்வதால் மயிலாடுதுறை பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News April 5, 2025
சங்கரன்பந்தல்: சுகாதார நிலையத்தில் ஆண் சடலம்

மயிலாடுதுறை, சங்கரன்பந்தல் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தனியாக இருந்த கழிவறையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. மருத்துவமனை ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி இறந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 4, 2025
மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

உழவர் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களிலும் வருகிற ஏப். 8 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணம் ஆகியவற்றிற்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
News April 4, 2025
மயிலாடுதுறை: இந்தியாவின் முதல் அச்சகம்

இந்தியாவில் முதல் அச்சகம் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் தஞ்சை மண்டலத்திலும், தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில்தான் முதல் அச்சகம் தொடங்கப்பட்டது. 1713ஆம் ஆண்டு, சீகன்பால்கு பாதிரியார் என்ற ஜெர்மானியரால் தொடங்கப்பட்ட இந்த அச்சகம் ‘டி நோபிலி அச்சகம்’ என்ற பெயரில் இன்றளவுன் செயல்படுகிறது. இதை எல்லோரும் தெரிந்துகொள்ள SHARE செய்யுங்கள்.