News April 2, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

வேலை தேடும் இளைஞர்களை கவரும் வகையில் பகுதி நேர வேலை மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்து போலியான செய்திகள் ஆன்லைனில் உலவி வருகின்றன. அந்த செய்திகளை நம்பி யாருக்கும் பணம் அனுப்பி ஏமாந்து விடாதீர்கள் என மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளது. Share செய்யுங்கள்.
Similar News
News April 4, 2025
மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறையில் பொறையார் மற்றும் சீர்காழி செயற்பொறியாளர் அலுவலகங்களில், நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டண தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் உட்பட அனைத்து மின்சாரம் தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இக்கூடம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை கலெக்டர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறையில் வரும் நாள்களில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கலெக்டர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார். கூரை வீடுகளில் வசிப்பவர்கள் கோடைக்காலம் முடியும் வரை அருகில் தண்ணீரை வைத்துக்கொள்ள வேண்டும். விறகு பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் விளக்குகளை கவனமாக கையாள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.