News April 9, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் , உணவு நிறுவனங்கள் , மோட்டார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் வருகின்ற ஏப்ரல் 19 மக்களவைத் தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Similar News

News April 8, 2025

மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

image

வேப்பங்குளம் பெரியதெருவை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவருக்கும் இவரது மனைவி கோடீஸ்வரிக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் கோடீஸ்வரியை தாக்கி சுவற்றில் மோதியதில் பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்தார். 2019 ஆம் ஆண்டு முதல் இசம்வம் குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி ராஜபாண்டியனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5000 அபராதமும் விதித்து அமர்வு நீதிமன்ற நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

News April 8, 2025

இளைஞரின் நற்செயலை பாராட்டிய எஸ்.பி

image

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் கடைவீதியில் சாலை ஓரத்தில் கிடந்த ரூ.10,000 பணத்தை அவ்வழியாக சென்ற ஹேமந்த் குமார் என்பவர் எடுத்து வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தியிடம் ஒப்படைத்தார். ஹேமந்த் குமாரின் நற்செயலை பொதுமக்கள் பாராட்டிய நிலையில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று ஹேமந்த்குமாரை நேரில் அழைத்து பாராட்டினார்.

News April 7, 2025

தபால் நிலையங்களில் ஆதார் முகாம்

image

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் ப்ராஜெக்ட் ஆரோ திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட மயிலாடுதுறை ஆர் எஸ், நீடூர், பேரளம் ஆகிய தபால் நிலையங்களில் ஒரு மாத காலம் ஆதார் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

error: Content is protected !!