News October 19, 2024

மயிலாடுதுறை: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத அதிசய கிராம

image

சீர்காழி அருகே பெரம்பூர் கிராமத்தில் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வௌவ்வால்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் வவ்வால்கள் இப்பகுதி விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வெடி வெடிக்காத தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். ஷேர் செய்யவும்

Similar News

News November 19, 2024

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் நவம்பர் 29-ஆம் தேதி நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பயன்பெறுமாறு ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். 

News November 19, 2024

விசிக தலைவருடன் திமுக நிர்வாகி சந்திப்பு

image

சீர்காழி அருகே மேலையூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான முத்து தேவேந்திரன் தனது இல்ல திருமண விழாவை முன்னிட்டு விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார். அவருடன் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News November 18, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை வட்ட அளவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் எதிர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி காலை 9 மணி முதல் நவம்பர் 21-ஆம் தேதி காலை 9 மணி வரை தங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை அந்தந்த கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.