News June 8, 2024
மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

தமிழக அரசு துணிநூல் துறை மூலம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு கழகம் மூலமாக ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in./jobs/ என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News April 21, 2025
அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இன்றைக்குள் (ஏப்.21) இங்கு <
News April 21, 2025
கர்ப்பிணியை தாக்கிய கணவர் கைது

மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி – ஜெயலட்சுமி தம்பதியினர். ஜெயலட்சுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் கிருஷ்ணமூர்த்தி மது அருந்திவிட்டு பிரச்சனை செய்ததால் பெற்றோர்கள் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் ஜெயலட்சுமியிடம் சமாதானம் பேசி வரச்சொல்லியபொழுது கிருஷ்ணமூர்த்தி தாக்கியுள்ளார். இதையடுத்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் காவல்துறை கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தது.
News April 20, 2025
மயிலாடுதுறை: கோடை விடுமுறை கால சிறப்பு ரயில்

தாம்பரம்-திருச்சி இடையே இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரயில் மேல்மருவத்தூர், திண்டிவனம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக இயக்கப்படுகிறது. முன்னதாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்ட இந்த ரயில் தற்போது பயணிகளின் வசதிக்காக வருகிற ஏப்.29 முதல் ஜூன்.29 வரை திங்கட்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயங்கும். அடிக்கடி சென்னை செல்லும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.