News April 26, 2025

மன்னார்குடி: கடன் பிரச்சினை தீர சிறப்பு வழிபாடு

image

மன்னார்குடி ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ ரணவிமோட்சகருக்கு நாளை (ஏப்.27) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மேல் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. நீண்ட நாள் கடன் சுமை மற்றும் தீராத நோய்கள் உடையோர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இதை இப்போதே SHARE செய்யவும்..

Similar News

News April 27, 2025

திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை

image

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்து துறையின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பணிகளுக்கு ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க நளையே (ஏப்.28) கடைசியாகும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே க்ளிக் <<>>செய்யுங்கள். வேலைதேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க..

News April 26, 2025

திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

கூத்தாநல்லூரை சேர்ந்த முகமது அன்சாரி என்பவர் தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் வாடகை ஒப்பந்த பத்திரத்திற்காக தான் செலுத்திய தொகையை திரும்ப வழங்க வேண்டி மன்னார்குடி நுகர்வோர் சங்கம் மூலமாக திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அன்சாரிக்கு சேர வேண்டிய தொகை தராமல் அவரை அலைக்கழித்ததற்காக ரூ.60,000 இழப்பீடு வழங்க வேண்டும் என இன்று தீர்ப்பளித்தது. 

News April 26, 2025

திருவாரூர்: 3935 அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பு

image

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!