News May 30, 2024

மனைவியை கொலை செய்த கணவர் கைது

image

எண்ணூர், சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (30). இவரது மனைவி ராஜலெட்சுமி (25). நேற்று தம்பதிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரேம்குமார் கத்தியால் ராஜலட்சுமியை குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை இன்று கைது செய்தனர்.

Similar News

News April 20, 2025

மீஞ்சூர்: வேலைக்கு வந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

image

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (54) கூலி தொழிலாளி. இவர் நேற்று மீஞ்சூர் அடுத்த வல்லூர் பகுதியில் கூலி வேலை செய்வதற்காக வந்தபோது, நெஞ்சு வலி இருப்பதாக படுத்திருந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சக பணியாளர்கள் வேலை செய்ய எழுப்பிய போது சத்தம் இல்லாததால் அவரை பரிசோதித்து பார்த்த போது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2025

திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் எண்கள்

image

▶மாவட்ட திட்ட அலுவலர் – 044-27660421, ▶மாவட்ட கருவூல அலுவலர் – 044-27660888, ▶முதன்மைக் கல்வி அலுவலர் – 9384034214, ▶திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர், – 7373002993, ▶பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் – 7373002996, ▶திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் – 9445000412, ▶பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் – 9445000410, ▶திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் – 9445000411, ▶மாவட்ட சமூக நல அலுவலர் – 044-27663912.

News April 20, 2025

உருக்கு ஆலையில் தீப்பிழம்பு சிதறி தொழிலாளர் பலி

image

கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்துர்நத்தம் கிராமத்தில் உள்ள தனியார் உருக்கு ஆலையில், பீகாரைச் சேர்ந்த ராஜ்குமார் (28) ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். கடந்த 10ஆம் தேதி ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தீப்பிழம்பு அவர் மீது சிதறி விபத்து ஏற்பட்டது. உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!