News March 20, 2025

மனைவியை கட்டையால் அடித்த கணவர் கைது

image

சங்கராபுரம் அடுத்த கல்லிப்பட்டை சேர்ந்தவர் முரளி(40). இவரது மனைவி மகாலட்சுமி(36). கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். நேற்று மகாலட்சுமி, அவரது உறவினருடன் சங்கராபுரம் சென்றார். அங்கு எதிர்பாராவிதமாக முரளியை சந்தித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. கட்டையால் மகாலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் முரளியை கைது செய்தனர்.

Similar News

News March 22, 2025

குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

image

கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. அதில், ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது. ஷேர் பண்ணுங்க

News March 22, 2025

கோயிலில் 4 கிலோ வெள்ளி திருட்டு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தில், ஏழு எல்லை காத்த மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை 10 மணி அளவில் கோவிலை பூசாரி திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வெள்ளியால் ஆன உடுக்கை, வேல், பாத கவசங்கள் 2 என நான்கு கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News March 22, 2025

டிராக்டர் மோதி மூதாட்டி பலி

image

கள்ளக்குறிச்சியை அடுத்த அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிளியம்மாள்(70). இவர் நேற்று மாலை, தனது மகளுடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். மேட்டுக்காலனி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பதிவு எண் இல்லாத டிராக்டர் டிப்பர் பின்பக்கம் வந்து மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே கிளியம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!