News November 10, 2024
மத்திய கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை பெற விண்ணப்பம் பதிவு
மத்திய அரசு கல்வி நிறுவனம் நிறுவனங்களான IIT,IIM,IIT,NIT மற்றும் மதிய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த (BC,MBC/DNC) மாணவ மாணவிகள் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைக்கு புதிதாக மற்றும் புதுப்பித்தலுக்காக விரும்பும் தகுதியான மாணவர்கள்tngovtitsscholarship@gmail.com என்ற முகவரிக்கு பூர்த்தி செய்து 15/01/2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும். என நவ.9 தர்மபுரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2024
தருமபுரி கலெக்டர் அறிவிப்பு
தருமபுரியில் ஆவின் பாலக முகவர்களாக நியமனம் பெற விருப்பம் உள்ள முப்படைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆவின் பாலாக முகவர் நியாயமானது ஆவின் நிறுவன www.aavinmilk.com என்ற நிறுவன இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து விற்பனைபிரிவு நந்தனம் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
News November 19, 2024
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12,836 பேர் விண்ணப்பம்
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு முகாமில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 907 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற முகாமில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம், முகவரி மாற்றம் என முகாமில் இதுவரை 12,836 பேர் விண்ணப்பித்துள்ளதாக என அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
News November 19, 2024
தர்மபுரி மாவட்டத்தில் 336 போக்சோ வழக்குகள் பதிவு
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரை பாலியல் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்ப்பம், குழந்தை திருமணம் ஆகிய நிகழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் மீது 165 போக்சோ வழக்குகளும், ஜனவரி 2024 முதல் அக்டோபர் 2024 வரை பாலியல் வன்கொடுமை, வளரிளம் பருவ கர்பபம் ஆகிய நிகழ்வுகளை ஏற்படுத்தியவர்கள் மீது 171 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாக கலெக்டர் சாந்தி அறிக்கையில் நேற்று தெரிவித்துள்ளார்.