News March 11, 2025

மத்திய அரசை கண்டித்து நாளை கண்டன பொதுக்கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் உள்ள கலைஞர் திடல் பகுதியில் நாளை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கவுள்ளதாகவும், இதில் தலைமை கழக பேச்சாளர்கள் மூன்று பேர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 12, 2025

உதவித்தொகை வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையினை உடனடியாக வழங்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 12, 2025

இடி தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே நேற்று இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த களமருதூர் கிராமத்தை சேர்ந்த ராமர் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூபாய் 4 லட்சம் நிவாரண உதவியை எம்.எல் ஏ மணிக்கண்ணன், வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.

News March 12, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கல்வி உதவித்தொகை கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் அவர்களின் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வி உதவி தொகை குறித்தான கூட்டம் மதியம் இரண்டு மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது இந்தக் கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

error: Content is protected !!