News April 9, 2025
மத்திய அரசு நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.ஐ.,) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன் பிரிவில் 17 இடங்கள் உள்ளன. 10, 12ஆம் வகுப்பு வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தால் போதும். 18-28 வயது உடையவராக இருக்க வேண்டும். டிரேடு தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு இருக்கும். பெண்கள், SC, ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை. வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
Similar News
News August 9, 2025
சென்னையில் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்சனை

சென்னை தி.நகர் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி உள்ள மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறுகின்றனர்.
News August 9, 2025
சென்னையில் 15% சாலை விபத்துகள் குறைவு

சென்னையில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சாலை விபத்துகள் 15 சதவீதம் ஆக தடுக்கப்பட்டுள்ளன என சென்னை போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னை சாலைகளில் 169 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்றும், இதனால் குற்றங்கள் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
News August 9, 2025
சென்னை: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

சென்னை இளைஞர்களே, IT துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலை கிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை தமிழக அரசு இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, J2EE, Web Designing, Testing என பல்வேறு Course-கள் உள்ளன. இதற்கான வகுப்புகள் சென்னையில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு <