News April 6, 2025

மதுரையில் மர்மமான முறையில் ரயில்வே போலீஸ் உயிரிழப்பு

image

மதுரை கூடல்புதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோபி (45). இவர் ரயில்வே போலீசாரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மேலும் முதுகுதண்டுவட பிரச்சனையும் இருந்துள்ளது. இந்நிலையில், மனைவி பிரியா வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட காரில் கோபி இறந்து கிடந்துள்ளார். மனைவி புகாரில் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 10, 2025

மதுரை : அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

மதுரை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் அக்னி வீரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. உடனே APPLY செய்து உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News April 9, 2025

மதுரை மாவட்டத்தில் இரவு காவலர் பணி விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று ( ஏப்ரல் 9 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2025

மதுரையில் அஜித் படம் வெளியாவதில் புது சிக்கல் 

image

நடிகர் அஜித் நடிப்பில் நாளை நாடு முழுவதும் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கான பல்வேறு ஏற்பாடுகளை ரசிகர் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள திரையரங்கத்தில் ஒரு டிக்கெட்டுக்கு 500 முதல் 250 வசூல் செய்ய வேண்டும் என திரைப்பட விநியோகம் அனுமதி பெற்றுள்ள நிறுவனம் கட்டாயப்படுத்துவதாக திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பாக ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.

error: Content is protected !!