News March 6, 2025
மதுரையில் புதிய பேருந்து வழித்தட சேவை துவக்கம்

மதுரை அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து ஆரப்பாளையம் முதல் அழகர்கோவில் வழியாக சிம்மக்கல் – கோரிப்பாளையம் – ரிசர்வ் லைன்- ஐயர் பங்களா- ஊமச்சிகுளம்- கடச்சனேந்தல் – கள்ளந்திரி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து ஆரப்பாளையத்திலிருந்து : 11:30 & 17:30 மணிக்கு கிளம்பும் அதேபோல் அழகர்கோவிலில் 10:15 & 16:மணிக்கு கிளம்பும் என அறிவிப்பு.அந்த பகுதியிலுள்ள உங்க நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News April 20, 2025
மதுரையில் 613 உணவகங்களுக்கு நோட்டீஸ்

மதுரை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக 613 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக RTI-ல் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் 51 உணவகங்கள் சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்ததாக நீதிமன்றம் மூலம் சுமார் 108 உணவக உரிமையாளர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
News April 20, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (20.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 20, 2025
மதுரை மக்களே எச்சரிக்கை

மதுரையில் நாளை ஏப்.21 முதல் ஏப்.26ஆம் தேதி வரை அதிகபட்சமாக 41 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெயில் கொளுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெயில் நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குளிர்ச்சியான பானம் மற்றும் உணவுகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.