News April 5, 2025
மதுரையில் டெங்கு பாதிப்பு குறைந்தது- சுகாதாரத்துறை அதிகாரிகள்

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 530 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டமிட்ட நடவடிக்கையின் பயனாக, 2023ஆம் ஆண்டில் இருந்த 835 டெங்கு பாதிப்பு 2024ஆம் ஆண்டில் 348 ஆகக் குறைந்துள்ளது, இது 41.48% குறைவாகும். மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான சுகாதார நடவடிக்கைகள் மக்களிடையே நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News April 6, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச அடையாள அட்டை வழங்கும் முகாம்

மதுரை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. அதன்படி கீழ்காணும் மண்டல வாரியாக முகாம்கள் நடைபெறுகின்றன. அதில் கலந்து கொண்டு பயன்பெற மதுரை மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அதன்படி கள்ளிக்குடி ,செல்லம்பட்டி ,T கல்லுப்பட்டி, ஏழுமலை ,உசிலம்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
News April 6, 2025
மதுரை அருகே மாடி வீடே இல்லாத வினோத கிராமம்

மதுரையில் இந்த காலத்திலும் மாடி வீடே இல்லாத அதிசய கிராமம் ஒன்றுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் சேடப்பட்டி அருகே பொன்னையன்பட்டி கிராமத்தில் சுமார் 120 வீடுகள் உள்ளது. ஊர் எல்லையில் காவல் தெய்வமாக திகழும் கருப்பசாமிக்கு கட்டுப்பட்டு கோவிலின் உயரத்தை மீறி கட்டிடம் அமைத்தால் துன்பம் வந்து சேருமோ என்ற அச்சத்தில் பல தலைமுறையாக மாடி வீடே காட்டாமல் உள்ளனர். இது பற்றி தெரியாத நண்பருக்கு SHARE பண்ணுங்க.
News April 6, 2025
மதுரையில் மர்மமான முறையில் ரயில்வே போலீஸ் உயிரிழப்பு

மதுரை கூடல்புதூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கோபி (45). இவர் ரயில்வே போலீசாரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மேலும் முதுகுதண்டுவட பிரச்சனையும் இருந்துள்ளது. இந்நிலையில், மனைவி பிரியா வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட காரில் கோபி இறந்து கிடந்துள்ளார். மனைவி புகாரில் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.