News April 6, 2024
மதுரையில் 40 டிகிரியை தொட்டது வெயில்

மதுரையில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தொட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில், கோடையின் கடுமையான வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், 2 முதல் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
Similar News
News April 20, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (19.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 19, 2025
கடத்தப்பட்ட தொழிலதிபர் நாக்பூரில் மீட்பு?

மதுரை பீபிகுளத்தை சேர்ந்த கருமுத்து சுந்தரராமன் (56) என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனது நிலத்தை ஆக்கிரமித்து, அதை வீட்டு மனைகளாக மாற்றி சிலர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 அன்று கடத்தப்பட்டார். இந்நிலையில், அவர் நாக்பூரில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News April 19, 2025
யார் இந்த சி.பா.ஆதித்தனார்?

சி.பா.ஆதித்தனார் தூத்துக்குயில் உள்ள காயாமொழி என்னும் ஊரில் 1905ஆம் ஆண்டு பிறந்தவர். இளமையிலேயே இவருக்கு எழுத்து, வெளியீடு ஆகியவற்றில் ஆர்வமிருந்தது. சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பியதும் 1942ல் மதுரை முரசு என்னும் இதழை தொடங்கினார். பின்னர் இந்த இதழ் தடை செய்யப்பட்டது. பின்னர் நவ.1 1942ல் தினந்தந்தி நாளிதழை துவங்கினார். இந்த இதழ் தமிழகத்தின் வெவ்வேறு நகரங்களுக்கு பரவியது. Share It.